கிரிக்கெட் உலகமே தல தோனியின் ரசிகர்களாக இருக்கும் நிலையில், அவரோ வாகனங்கள் மீது அளவு கடந்த காதல் கொண்டவராக இருக்கின்றார். எம்எஸ் தோனிக்கு பைக்குகள் மற்றும் கார்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். இதற்கு அவரிடத்தில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையே சான்றாகும். எக்கசக்கமான வாகனங்கள் அவரிடத்தில் உள்ளன. விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள் மற்றும் பைக்குகளுக்கு தனி அறையே வைத்துள்ளாராம். உதாரணமாக நிஸான் ஜுங்கா போன்ற அரிய வகை கார்கள் அவரிடத்தில் இருக்கின்றன. அரிய வகை கார் மட்டுமின்றி அரிய வகை பைக்குகளும் அவரிடத்தில் உள்ளன.
இந்த நிலையில் தோனி தனது கேரேஜில் Yamaha RD350- மோட்டார் பைக் வைத்திருந்துள்ளார். அந்த பைக்கை தோனி ஸ்டார்ட் செய்ய சிரமப்படும் வீடியோவை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் காணலாம்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்திற்கு வெளியே தோனியைப் பார்க்க காத்திருந்த சில இந்த வீடியோவை எடுத்துள்ளனர். இந்த வீடியோ பிரபலமான யூடியூப் சேனலில் பகிரபட்டுள்ளது.