fbpx

பந்துவீச்சில் மரண பயத்தை காட்டிய மும்பை!… வெளியேறியது லக்னோ!… குவாலிஃபயர் 2-க்கு முன்னேற்றம்!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில், 81 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிஃபயர் 2-க்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது குவாலிஃபயர் போட்டியில், புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக, கேமருன் கிரீன் 23 பந்துகளில் 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 33 ரன்களும் விளாசினர். லக்னோ அணி தரப்பில் நவீன்-உல்-அக் 4 விக்கெட்டுகளும், யாஷ் தாக்கூர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் விளாசினார். மும்பை அணி பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காட்டினார்.இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் குவாலிஃபயர் 2ல் மும்பை அணி மோதுகிறது.

Kokila

Next Post

ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை எடுக்க தல தோனி போட்ட மாஸ்டர் பிளான்!... வைரலாகும் வீடியோ!

Thu May 25 , 2023
ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை எடுக்க தல தோனி, பீல்டரை ஆஃப்-சைடுக்கு நகர்த்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் குவித்தது.இதனை அடுத்து 173 […]
IPL-லிருந்து ஓய்வு..!! மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் தோனி..? பிசிசிஐ பரிசீலனை..!!

You May Like