மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவும், அவரது மனைவி நடாஷாவும் பிரிந்து வாழ்வதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎஸ் தொடரில், மும்பை அணியின் போட்டியை காண நடாஷா ஒருமுறை கூட வரவில்லை.
மேலும், சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்டியா உடன் இருந்த புகைப்படங்களை நடாஷா நீக்கியுள்ளார். அதோடு, பாண்டியாவின் பெயரையும் அவர் நீக்கிவிட்டதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஜோடி மே 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Read More : தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு..!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!