fbpx

MI vs LSG : லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு!

67வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 65 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் மீதமுள்ள சென்னை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஹைதராபாத் அணிகளில், எந்த இரண்டு அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதிபெறும் என்ற எதிர்பார்ப்புகளுடன் ஐபிஎல் லீக் போட்டிகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது.

இறுதிக்கட்டத்தை எட்ட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி லக்னோ முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

லக்னோ அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் (-0.787) மிகவும் பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முடிந்து விட்டது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் லக்னோ 4 ஆட்டங்களிலும், மும்பை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

மம்தா பானர்ஜி குறித்து அவதூறு கருத்து.. உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Next Post

"துன்புறுத்தவில்லை… கண்ணியமாக நடத்தினார்கள்"!! நீதிமன்றத்தில் சவுக்கு பதில்!!மே 28 வரை காவல் நீட்டிப்பு

Sat May 18 , 2024
காவல்துறையினர் துன்புறுத்தவில்லை, என்னை கண்ணியமாக நடத்தினார்கள் என்றும், கோவை சிறைக்கு பதிலாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் கூறியுள்ளார். பெண் காவலர்கள் குறித்து ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் அவதூறாக பேசிய வழக்கில் கடந்தமே மாதம் 4ஆம் தேதி அன்று சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கோவை மற்றும் திருச்சி சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் […]

You May Like