fbpx

போதையால் ஏற்பட்ட விபரீதம்…..! பத்திரிக்கை வைப்பதற்காக சென்ற தம்பிக்கு ஏற்பட்ட பரிதாபம்……!

பொதுவாக இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விதமான தவறுகளுக்கும் மது ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. கணவன், மனைவிக்குள் ஏற்படும் தகராறாக இருந்தாலும் சரி, அண்ணன், தம்பிக்குள் ஏற்படும் தகராறாக இருந்தாலும் சரி அல்லது பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சீண்டலாக இருந்தாலும் சரி, விபத்துகளாக இருந்தாலும் சரி இவை அனைத்திற்கும் ஏதாவது ஒரு வகையில், இந்த மது ஒரு முக்கிய காரணமாக வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (36). இவர் ஒரு சலூன் கடையை நடத்தி வருகிறார் இவருடைய மனைவி நந்தினி (30) இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மொத்தம் மூன்று குழந்தைகள் இருக்கின்றன. தற்போது ஆடி மாதம் நடந்து வருவதால், குலதெய்வ வழிபாடு செய்வதற்காக தன்னுடைய குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த இந்த தம்பதிகள் திட்டமிட்டனர்.

இதன் காரணமாக, உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வந்த சமயத்தில், தன்னுடைய அண்ணன் விநாயகத்தை அழைப்பதற்காக அவருடைய வீட்டிற்கு முருகன் சென்றிருந்தார். அப்போது விநாயகம் அளவு கடந்த மது போதையில் இருந்துள்ளார். இதனால் அண்ணன், தம்பி இருவருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. அதன் பிறகு இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. ஆகவே ஆத்திரம் கொண்ட அண்ணன் விநாயகம், கத்தியை எடுத்து உடன்பிறந்த சகோதரன் என்று கூட பார்க்காமல், முருகனின் மார்பில் சரமாரியாக குத்தி இருக்கிறார்.

இந்த சம்பவத்தின் காரணமாக, ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த முருகன், சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து விநாயகம் கைது செய்யப்பட்டு இருக்கிறார். குழந்தைகளின் காதணி விழாவிற்கு அழைப்பு விடுக்க வந்த தம்பியை, சொந்த அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

’லிவிங் டு கெதர் உறவு சட்டவிரோதமானது’..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Thu Aug 3 , 2023
மைனரின் லிவிங் டு கெதர் உறவு சட்டவிரோதமானது மற்றும் ஒழுக்கக்கேடானது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 17 வயது சிறுவன் மற்றும் அவரது லிவ் இன் பார்ட்னர் (வயது 19) ஆகியோர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. லிவ்-இன் உறவை கருதுவதற்கு பல நிபந்தனைகள் உள்ளன. ஒரு குழந்தை லிவ்-இன் உறவை கொண்டிருக்க முடியாது. இது ஒழுக்கக்கேடான செயல் மட்டுமல்ல, சட்டவிரோதமானதும் ஆகும் […]

You May Like