சென்னை அருகே பிரபல ரவுடியை மனைவியின் கண்முன்னே சரமாரியாக கத்தியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை அருகே மறைமலை நகரின் தைலாவரம் பகுதியில் வசித்து வந்தவர் சேகர் (28). இவர் கஞ்சா , கொலை வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடியாவார். பல கொலைகளில்தொடர்புடையதால் இவருக்கு எதிரிகள் அதிக அளவில் இருந்துள்ளனர். இதனால் வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மறைமலை நகர் தைலாபுரத்தில் மாமியார் வீட்டில் தன் மனைவி வினிதா மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு வரலாம் என சென்றிருக்கின்றர். அப்போது குழந்தை மற்றும் மனைவியிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே பைக்குகளில் வேகமாக படையெடுத்து வந்த கும்பல் விரட்டியுள்ளனர். இதனால் பயந்து வீட்டுக்குள் சென்று தாழிட்டுள்ளார் ஆனால் விடாமல் துரத்திய கும்பல் அவரை ஹாலுக்கு இழுத்து வந்து மனைவியின் கண்முன்னே அரிவாளால் சரமாரியாக வெட்டியது. சம்பவ இடத்திலேயே மனைவியின் கண்முன்னே பரிதாபமாக சேகர் உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வினிதா அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
தகவல் அறிந்து வந்த போலீஸ் வழக்குப் பதிவு செய்து உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதத்தால் நடந்த கொலை என்று கூறப்படுகின்றது. இதனால் போலீசார் எந்த கும்பல் கொலை செய்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.