fbpx

தர்மபுரி| வனப்பகுதியில் இளம்பெண் படுகொலை…..! காவல்துறையினர் தீவிர விசாரணை…..!

தர்மபுரி அருகே கடத்தூரான் கொட்டாய் அடுத்துள்ள நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் இளம் பெண் ஒருவர் பாறைகளுக்கு இடையில் உயிரிழந்த நிலையில், கிடந்திருக்கிறார். அந்த வழியே சென்ற மக்கள் இது தொடர்பாக அதிகமான்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் சென்று இது குறித்து ஆய்வு நடத்தினார்.

அதோடு அதியமான் கோட்டை காவல்துறையினர் சடலத்தை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் தொடர் விசாரணையில் உயிரிழந்து கிடந்தவர் தர்மபுரி பழைய ரயில்வே லைன் பகுதியில் உள்ள கோல்டன் தெருவை சேர்ந்த தர்மபுரி நகராட்சி கவுன்சிலர் புவனேஸ்வரனின் மகள் ஹர்ஷா (23) என தெரியவந்துள்ளது.

பி பார்ம் முடித்துள்ள இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பார்மசி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் கருத்து நெறிக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். ஆகவே அவர் நேற்று முன்தினம் பகலிலோ அல்லது மாலை நேரத்திலோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவருடைய கொலைக்கு காரணமானவர்கள் மற்றும் கொலைக்கான பின்னணி உள்ளிட்டவை தொடர்பாக அதியமான் கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு ஹர்ஷாவின் கைபேசியில் இறுதியாக பேசப்பட்ட அழைப்புகளின் அடிப்படையில், இளைஞர் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

கோவை அருகே…..! சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொது வெளியில் பதிவிட்ட 2️ பேரின் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை…..!

Thu Jun 8 , 2023
கோயமுத்தூரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவு என்ன ஓட்டத்தில் இருப்பவர்கள் உள்ளே காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதற்றத்தை உண்டாக்கும் விதத்திலும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் விதத்திலும் கருத்துக்களை பதிவிடுபவர்களை கண்காணித்து அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இத்தனை நிலையில் கரும்புக்கடை சபா […]

You May Like