fbpx

பெண் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய முஸ்லீம்கள்!. பஹல்காம் தாக்குதல் குறித்து செய்தி சேகரித்தப்போது கொடூரம்!. வீடியோ வைரல்!

Journalist Chitra Tripathi: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் நகருக்கு சுற்றுலாப் பயணிகள் மீது சமீபத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்தி சேனல் பத்திரிகையாளர் சித்ரா திரிபாதி என்பவர் மீது இஸ்லாமியர்கள் கும்பல் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் உள்ளூர்வாசிகள் கோபத்துடன் பத்திரிக்கையாளரை சூழந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும், பத்திரிக்கையாளர் திரிபாதி தனது வேலையைச் செய்ய விடுங்கள் என்று அந்த கும்பலிடம் பலமுறை கூறியுள்ளார். ஆனால் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அந்த கும்பல் பத்திரிகையாளரை அவமதித்து திட்டியுள்ளனர். இது ஊடக சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்துகிறது.

வீடியோவில், சித்ரா திரிபாதி உள்ளூர் பெண்களிடம் தனது வேலைக்காக மட்டுமே அங்கு வந்திருப்பதை விளக்க முயற்சிப்பதைக் காணலாம், ஆனால் அவளுக்குப் பின்னால் நிற்கும் கூட்டம் அவளைப் பேச விடவில்லை. பின்னர் அவள் கூறுகிறாள்- “நான் ஒரு பத்திரிகையாளர், ஆனால் நீங்கள் என்னைத் திட்டுகிறீர்கள் – இது மிகவும் தவறு… நீங்கள் என்னைக் கொல்ல விரும்பினால், என்னைக் கொல்லுங்கள்.” இதன் பிறகு, கும்பலில் இருந்த சிலர் திரிபாதியை நோக்கிக் கத்தத் தொடங்கினர், வீடியோவில், சில முஸ்லிம் இளைஞர்கள் ‘குலிஸ்தான் ஹம் ஷர்மிந்தா ஹை தேரே கதில் ஜிந்தா ஹை’ போன்ற கோஷங்களை எழுப்புவதையும் காண முடிந்தது. இது தவிர, காஷ்மீரிலிருந்து ஒரு குரல் வந்தது – ‘மக்கள் இந்து முஸ்லிம் பாய்-பாய்’ என்று கத்துவதையும் காண முடிந்தது.

இந்த காணொளியை அசாம் அமைச்சர் அசோக் சிங்கால் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, சித்ரா திரிபாதி கிட்டத்தட்ட அந்த கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இதுதான் காஷ்மீரின் நிலை. இது ஒரு மிகக்கடுமையான சம்பவமாகும், குறிப்பாக பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையைச் செய்யும் போது சவால்களை சந்திக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது. “உங்கள் அழிவின் மீது தான் யாரோ ஒருவரின் இருப்பு அமைந்திருக்கிறது என்றால், அவர்கள் உடன் அமைதி பேச்சுகள் நடத்த முடியாது.” என்று பதிவிட்டுள்ளார்.

‘பாகிஸ்தான் ஒழிக’:இந்த வீடியோ குறித்து மூத்த பத்திரிகையாளர் அசோக் ஸ்ரீவஸ்தவா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதாவது, “24 மணி நேரத்திற்குள், முகமூடிகள் கழன்றுவிட்டன! நேற்று, பெயர்களைக் கேட்டு மதத்தை அறிந்த பிறகு இந்துக்கள் கொல்லப்பட்டனர். இன்று, இன்று, ஸ்ரிநகரில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை பற்றி செய்தி தொகுத்து வரும் பத்திரிகையாளர்கள், உள்ளூர் மக்களால் நேரடியாகவே தாக்கப்பட்டார்.

திரிபாதியை கும்பல் கூச்சலிட்டது வெட்கக்கேடானது என்று கூறிய ஸ்ரீவஸ்தவா, கோஷமிட்டவர்களிடம், “தைரியம் இருந்தால், ‘பாகிஸ்தான் ஒழிக’ என்ற கோஷத்தை எழுப்புங்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பலரும் தங்களது கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர் சித்ரா திரிபாத்திக்கு உற்சாகம் அளித்து, “தைரியமாக இருங்கள்”, “உங்கள் பணி சரியானது” என ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Readmore: பால் உற்பத்தி அதிகரிப்பு… ஒரு லிட்டர் ரூ.40-க்கு விற்பனை…! பால்வளத் துறை அமைச்சர் சொன்ன தகவல்…!

English Summary

Muslims attacked a female journalist!. Cruelty while covering news of the Pahalgam attack!. Video goes viral!

Kokila

Next Post

அரக்கோணத்தில் ரயிலை கவிழ்க்க சதித் திட்டமா...? தண்டவாள இணைப்புகளில் உள்ள போல்ட்டுகள் மாயம்...

Fri Apr 25 , 2025
Is there a conspiracy to overturn the train in Arakkonam?... The bolts in the rail joints have disappeared.

You May Like