தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அந்த புகாரை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது என்றும் விஜயலட்சுமி, சீமான் மீது தெரிவித்த புகார்கள் அவர் அளித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகிறது. எனவே, சீமானுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (பிப்.27) இந்த வழக்கு தொடர்பாக சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், சீமான் ஆஜராகவில்லை. இதையடுத்து, இன்று (பிப்.28) விசாரணைக்கு ஆஜராகுமாறும், இல்லையென்றால் கைது செய்யப்படலாம் என்றும் சென்னையில் உள்ள சீமானின் வீட்டில் இன்று போலீசார் சம்மன் ஒட்டினர். ஆனால், நாம் தமிழர் கட்சி நிர்வாகி அந்த சம்மனை கிழித்ததால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, இதையடுத்து, சம்மனை கிழித்த சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, சீமான் வீட்டு காவலாளியிடம் துப்பாக்கி இருந்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நடிகை விஜயலட்சுமியின் விவகாரம் தற்போது பூதாகரமாய் வெடித்துள்ள நிலையில், பரபரப்பு வீடியோ ஒன்றை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “விஜயலட்சுமியை திமுக கூட்டிட்ரு வந்து என் மேல வழக்கு கொடுக்குறாங்கன்னு சீமான் பேசியிருக்காரு. சீமான் அவர்களே.. முதலில் விஜயலட்சுமி யாரென்றே தெரியாதுன்னு சொன்னீங்க. அப்புறம் காங்கிரஸ்காரங்கத்தான் விஜயலட்சுமியை கூட்டிட்டு வந்ததா சொன்னீங்க. அப்புறம் நான் வழக்கு போட்டப்போ, பாஜக தான் விஜயலட்சுமியை இயக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னீங்க.
நான் மாச மாசம் ரூ.50,000 கொடுத்துடுறேன். என்ன பத்தி எங்கயும் பேசாத அப்டின்னு சொல்லிட்டு, மாதம் ரூ.50,000 போட்டீங்க. என்கிட்ட வீடியோ எல்லாம் வாங்குனீங்க. அப்புறம் உங்க பொன்னான வாயிலிருந்து ‘பொண்டாட்டி பொண்டாட்டி’ அப்படினு வீடியோல பேசுனீங்க. அந்த வீடியோவை எல்லாம் பார்த்துதான், விஜயலட்சுமி உங்களோட முதல் மனைவியான்னு நீதிமன்றம் கேட்ருக்கு. ஆனா இப்போ, அந்த பொம்பளைய நேர்ல வரச் சொல்லுங்க, நான் பேசுறேன்னு சொல்றீங்க.
நான் காத்திருக்கேன் சீமான் அவர்களே, உங்கள நேர்ல பாத்து என்ன பாத்தா உனக்கு எப்படி தெரியுதுன்னு கேக்கணும்னு நானும் காத்துட்டு இருக்கேன். காவல்துறை கிட்ட சொல்லுங்க, உடனே அரேஞ்ச் பண்ணிடுவாங்க. என்னோட பாவத்தை கட்டிக்காதீங்க. என் பாவம்.. உங்களை சும்மாவே விடாது” என பேசியுள்ளார்.
Read More : ’இனி கும்பலாக நின்று வாகன ஓட்டிகளை பிடிக்கக் கூடாது’..!! போக்குவரத்து போலீசாருக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!