fbpx

“மாணவச் செல்வங்களின் மர்ம மரணங்கள் மனவலியை தருகிறது”..! – சீமான்

மாணவர்களின் தொடர் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்’ என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்விக்கூடங்களில் அடுத்தடுத்து நிகழும் பெண் குழந்தைகளின் மர்ம மரணங்கள் குறித்த கொடுஞ்செய்திகள் பெரும் பதைபதைப்பையும், மனவலியையும் தருகிறது. கொரோனா தொற்றுக்குப் பிறகான காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பெரும் இடைவெளியைக் களையவும், பாடச்சுமைகளால் மாணவப் பிள்ளைகளுக்கு ஏற்படும் மனஅழுத்தங்களைக் குறைக்கவும், பள்ளிச்சூழலில் மாணவப் பிள்ளைகளுக்கான முழுப்பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்.

"மாணவச் செல்வங்களின் மர்ம மரணங்கள் மனவலியை தருகிறது"..! - சீமான்

ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலும் உளவியல் மருத்துவர்களை ஆசிரியராக நியமித்து, சிறப்பு ஆலோசனை வகுப்புகளை நடத்தி மாணவச் செல்வங்களின் மனநலனை செம்மைப்படுத்தவும், இனியொரு உயிர் போகாவண்ணம் தடுக்க அவர்களது பாதுகாப்பையும், உளவியல் நலனையும் உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் அடுத்தடுத்து பலி..! பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!

Tue Jul 26 , 2022
குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து அடுத்தடுத்து 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால், அங்கு சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. அவ்வப்போது இதுபோன்ற கள்ளச்சாராய விற்பனையும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், அகமதாபாத் மாவட்டம் மற்றும் போட்டட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி […]
கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் அடுத்தடுத்து பலி..! பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!

You May Like