இங்கிலாந்தில் பரவி வரும் ஸ்கார்லெட் காய்ச்சலால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மர்ம காய்ச்சல் குறித்து தெரிவித்துள்ள UKHSA என்ற அமைப்பு, கடந்த 2022ல் மட்டும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 54,430 பேர்களுக்கு ஸ்கார்லெட் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விடவும் 20 மடங்கு அதிக எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 1953 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக அதிகமான எண்ணிக்கை இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஸ்கார்லெட் காய்ச்சலுக்கு 9,482 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் இந்த எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகமாக Strep A எனப்படும் நோய் பதிவாகி உள்ளதாகவும் 35க்கும் மேற்பட்ட சிறார்கள் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.