தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீசன் மாறியிருப்பதாலும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கோடை காலத்தை மிஞ்சும் வகையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால் கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டம் குவிந்து காணப்படுகிறது. கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது
இன்று காலை மட்டும் ஏராளமானோர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டனர். மேலும், கடலூர் அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.