சென்னை மாநகர பகுதியில் மெட்ரோ கழிவு நீரேற்றும் நிலையத்தில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. அந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தண்டையாா்பேட்டை பகுதியில் உள்ள காா்ப்பரேஷன் காலனி சேனியம்மன் கோவில் தெருவில் மெட்ரோவின் கழிவு நீரேற்றும் நிலையம் அமைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, கழிவுநீா் சேகரிக்கப்படும் கிணறு ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் வியாழக்கிழமை அன்று கிடந்துள்ளது.
இதனை கண்ட ஊழியா்கள் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், அங்கு வந்த புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.