fbpx

#ராமநாதபுரம் : அலையில் மாயமான மாணவன்.. கரையொதிங்கிய சடலம்..!

ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கலைக் கல்லூரியில் எம்.எஸ்சி. பயிலும் 6 மாணவா்கள் சனிக்கிழமை அன்று அரியமான் கடல் அலையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது இரு மாணவர்கள் அலையில் சிக்கிக் கொண்டனர்.இருவரும் உயிரிழந்த நிலையில், ஒரு மாணவரின் உடல் அப்போதே மீட்கப்பட்டது. மற்றொரு மாணவரின் உடல் இரு நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை அன்று கரை ஒதுங்கியுள்ளது. 

அவர்கள் திருமங்கலத்தில் வசிக்கும் விக்னேஷ்வா், பறையடியில் வசிக்கும் வைரமுருகன், திருநகரில் வசிக்கும் விக்னேஷ்,மதுரை அழகப்பன் தெருவில் வசிக்கும் விட்சன், ஒத்தக்கடை பிரவீன்குமாா், டி. கல்லுப்பட்டியில் வசிக்கும் அருண்பாண்டியன் ஆகிய 6 மாணவர்கள் தான் அரியமான் கடல் பகுதிக்கு சென்றுள்ளனர். 

இந்த நிலையில், விக்னேஷ் மற்றும் விட்சன் ஆகிய இருவரையும் கடல் அலை திடீரென இழுத்துச் சென்றது. உடனே நண்பர்கள் மற்றும் அந்த பகுதியைச் சோந்த சிலர் கடலுக்குள் சென்ற தேடிய நிலையில், உயிரிழந்த நிலையில் விக்னேஷ் மாணவரின் உடலை மட்டும் மீட்டுள்ளனர். மற்றொரு மாயமான விட்சன் மாணவனை தேடிய போது அவர் கிடைக்கவில்லை . 

மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து இரண்டு நாள்களுக்குப் பிறகு, மாணவா் விட்சனின் உடல் திங்கள்கிழமை அன்று கரை ஒதுங்கியுள்ளது. தகவல் அறிந்து மாணவனின் உடலை மீட்டு காவல்துறையினர், உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Baskar

Next Post

#சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்..!

Tue Nov 22 , 2022
சென்னை மாநகர பகுதியில் உள்ள வியாசர்பாடியில் வசிக்கும் 33 வயது பெண் ஒருவர், புளியந்தோப்பு பகுதியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். புகாரில் தனக்கு 15 வயதில் 11ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார்.  இந்த நிலையில், அதே பகுதியில் அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் (19)என்ற இளைஞர் தன் மகளை கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார். இதனிடையே மகளை பலமுறை […]

You May Like