fbpx

இளம்பெண் மரணத்தில் மர்மம்..!! கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலையா..? அதிர்ச்சி தகவல்..!!

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே திருச்சி – சிதம்பரம் சாலையில் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் சாலையோரம் இறந்த நிலையில், 20 வயது மதிக்கத்தக்க பெண், சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இறந்த இளம் பெண் பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா என்பதும், இவர் அரியலூரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதனை அடுத்து இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அப்பெண் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பார்த்திபனை பிடித்து விசாரித்ததில், பார்த்திபனுக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண பத்திரிகைகளை வழங்கி வந்துள்ளார். இதை அறிந்த அபிநயா பார்த்திபனிடம் சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி இரவு அபிநயாவுடன் இருசக்கர வாகனத்தில் உடையார்பாளையம் அருகே சென்ற பொழுது சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்ததாகவும், இதில் இருவரும் காயம் ஏற்பட்டு உதவிக்கும் யாரும் இல்லாததால் சாலையோர பள்ளத்தில் அபிநயாவை போட்டுவிட்டு பார்த்திபன் மட்டும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று சென்றுள்ளார். இந்நிலையில், உயிருக்கு போராடிய நிலையில் அபிநயா சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார்.

காதலியை காப்பாற்றாமல் தூக்கி வீசி சென்ற காதலன் பார்த்திபனை, போலீசார் கைது செய்து செய்தனர். ஆனால், அபிநயாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சமூக ஆர்வலர்கள், மாதர் சங்க அமைப்பினர்கள் காவல் கண்காணிப்பாளர் பெரஸ்கான் அப்துல்லாவிடம் பெண் சாவில் மர்மம் உள்ளது. எனது பெண் விபத்தில் இறக்கவில்லை. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை பார்த்திபன் மட்டும் செய்திருக்க முடியாது. மேலும் சிலர் இச்சமபவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து தண்டனை பெற்று தரவேண்டும் என்றும் மனு அளித்தனர்.

Chella

Next Post

Manager பணிக்கு தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு...! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்....!

Sun Jun 4 , 2023
HDB Financial Services வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Manager பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் உள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிக்கு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு […]
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

You May Like