குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24ஆம் தேதி நிறைவடைகிறது. இதனால், நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்திய குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் திரு.ஜக்தீப் தன்கர் அவர்களுக்கு அஇஅதிமுக தனது முழு ஆதரவினையும் நல்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.