டாடா குழும முன்னாள் தலைவர் மிஸ்ட்ரி கார் விபத்து குறித்து பென்ஸ் கார் நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது…..
மிஸ்ட்ரியின் கார் விபத்து குறித்து பல்கர் காவல்நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கண்காணிப்பாளர் பாட்டில், கூறுகையில் ,மெர்செட்ஸ் – பென்ஸ்வெளியிட்டுள்ள அறிக்கையில் , ’’ விபத்து நடந்த 5 நொடிகளுக்கு முன்பு பிரேக்… அப்ளை செய்யப்பட்டுள்ளது. எனவே ரோட் டிவைடரில் மோதியுள்ளது. இது தொடர்பாக சிறப்பு நிபுணர்கள் காரை ஹாங்காங்கில் இருந்து வந்து சோதனை செய்து உள்ளனர். கார் விபத்து நடப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னர் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்திருக்கின்றது. 89 கி.மீ . ஆக வேகம் குறைந்த போது டிவைடரில் மோதியுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது சடன் பிரேக் அப்ளை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் ’’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல் ஆடிஓ அதிகாரிகளும் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள், ’’ அதில் , விபத்தின் போது 4 ஏர் பேக்குகள் திறந்திருந்தது. ஓட்டுனர் சீட்டில் 3-ம் முன் இருக்கையில் ஒன்றும் திறந்திருந்தது. இதுவரை கார் தானேவில் உள்ள பென்ஸ் நிறுவன ஷோ ரூமில் வைக்கப்பட்டுள்ளது. முழு சோதனை நிறைவு பெற்ற பின்னர் இறுதி அறிக்கை வழங்கப்படும். ’’ என தெரிவித்தார். டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ட்ரி (54) , தனது நண்பர் பண்டோல் உள்ளிட்டோருடன் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தபோது கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.