fbpx

இந்தியாவில் பாதுகாப்பு கம்மி, ஜப்பான் தான் முதலிடம்

ஒவ்வொரு நாளும் உலகில் கார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏராளமான மக்கள் சாலை விபத்தில் உயிரிழப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 13 லட்சத்து ஐம்பதாயிரம் விபத்துகள் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன. இதன் கீழ் ஒவ்வொரு நாளும் சுமார் 3,700 பேர் கார் விபத்தில் உயிரிழக்க நேரிடுகிறது. இந்நிலையில்,  கம்பேர்  மார்க்கெட் ஆஸ்திரேலியா என்ற நிறுவனம் ஒன்று, உலகளவில் ஓட்டுநர் தரவு மற்றும் உலகளவில் ஏற்படும் கார் விபத்துகள் தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆய்வறிக்கையின்படி, உலகின் சிறந்த திறமையான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, கனடா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 20 நாடுகளில் நடந்த இந்த ஆய்வின் முடிவில் உலகின் சிறந்த திறமையான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் உள்ளது. ஜப்பான் நாட்டில் உயிரிழப்பு ஏற்படுத்தும் அளவிற்கு விபத்துகளை ஏற்படுத்தும் வித்தியாசம் என்பது ஆண் மற்றும் பெண் ஓட்டுனர்களுக்கு இடையேயான சராசரி வித்தியாசம் என்பது 2.7 ஆகும். பெண்களை காட்டிலும் ஆண்களே அங்கு அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். சாலை விபத்துகளில் குறைந்த உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு லட்சம் பேரில் 6.4 பேர் மட்டுமே சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். அதிகபட்சமாக தென்னாப்ரிக்காவில்,  ஒரு லட்சம் பேரில் 34.9  ஆண்களும், 9.9 பெண்களும் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர்.

விபத்து ஏற்படுத்துவதில் பாலின அளவில் அதிக வித்தியாசம் கொண்ட நாடுகளின் பட்டியலில் தென்னாப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு பெண்களை காட்டிலும் ஆண்கள் அதிகப்படியான விபத்தில் ஈடுபடுகின்றனர்.  இந்த பட்டியலில் பிரேசில், கொலம்பியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்த பட்டியல் என்பது பாலினம் அடிப்படையில் எடுக்கப்பட்டது அல்ல எனவும், விபத்துகள் ஏற்படுவது என்பது அவர்களது அனுபவத்தின் அடிப்படையில் வேறுபடும் என்றும், இந்த ஆய்வை நடத்திய கம்பேர்  மார்க்கெட் ஆஸ்திரேலியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Maha

Next Post

சோமேட்டோ கொடுத்த ஆஃபர்.. ஒட்டுமொத்த இந்தியாவும் ஷாக்..!

Thu Jun 15 , 2023
என்னதான் உங்களுக்கு டீ பிடித்தாலும், ஒரு நாளுக்கு 10 முறை டீ குடித்தாலும், இந்த ஸ்டார்பக்ஸ் காஃபி மீது ஒரு கண் எப்போதும் இருக்கும். ஒரு முறையாவது குடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், அப்போ ஸ்டார்பக்ஸ் காஃபி அவ்வளவு சூப்பரா இருக்குமா என நீங்கள் நினைக்க வேண்டாம் அது ஒவ்வொருவரின் ரசனைக்கும், பாக்கெட்டில் இருக்கும் பணத்தையும் பொருத்தது.இந்த நிலையில் டிவிட்டரில் சந்தீப் என்பவர் ஸ்டார்பக்ஸ் மற்றும் சோமேட்டோ குறித்து […]

You May Like