மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அரசியலமைப்பு 129-ஆவது சட்ட திருத்தம் உட்பட 2 மசோதாக்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது.
வருகிற 20-ஆம் தேதியுடன் குளிர்கால கூட்டத்தொடர் முடிவடையும் சூழலில், ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) சட்டத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். . ஜன நாயகத்திற்கு எதிரான ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ் தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு ஆதரவு தெரிவித்து கலைஞர் கருணாநிதி பேசியுள்ளார். நெஞ்சுக்கு நீதி புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார். அவர் குரல் வழியாக ஆதரவு தெரிவித்த வீடியோ என்னிடம் உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் வைத்தால் செலவுகள் மிச்சமாகும் என அவர் கூறியிருந்தார். இப்போது அதை கொண்டு வந்தால் நாட்டின் பன்முக தன்மை சிதைந்துவிடும் என கதை கூறுகிறார்கள்..
இந்தியா என்பது ஒரே நாடா? பல நாடுகளில் ஒன்று தான் இந்தியா.. இதை எப்படி ஒரே நாடு என சொல்கிறீர்கள்.. உணவு பழக்கவழக்கம், மொழி, கலாச்சாரம், பன்பாடு, எல்லாமே வேறு.. ஒரே தேர்தலுக்கு என்று சொல்வதற்கு முன், ஒரே கல்வி கொள்கை, ஒரே வரி, ஒரே ரேஷன் கொண்டு வந்திருக்க வேண்டும்.. அதை ஏன் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார்.