நாகாலாந்தின் 121 வயதான புபிரேய் புகா என்ற பெண்மணி கிக்வர்மா கிராமத்தில் காலமானார்.
மூதாட்டி தனது கொள்ளு பேத்தி அர்ஹெனோவுடன் வசித்து வந்தார். தகவல் படி, புகா எண்பதுகளின் காலக்கட்டத்தில் பார்வையற்றவராகிவிட்டார், மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது காது கேட்கும் திறனையும் இழந்தார், அவருக்கு நான்கு குழந்தைகள் – மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அவர்களின் மூத்த மகன் மாநிலத்தில் முதல் மெட்ரிக், முதல் பட்டதாரி மற்றும் முதல் அரசிதழ் அதிகாரியாக பணியாற்றியவர், 1989 இல் காலமானார். புபிரேய் புகாவுக்கு 18 பேரக்குழந்தைகள், 56 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று வயது மூப்பு காரணமாக காலமானார் .