நாகர்கோவில் பகுதியில் வசித்த சுஷ்மா (26) என்ற பெண் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். டெல்லி பகுதியை சேர்ந்த ஷியாம் (28) என்பவரும் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர். இவர்கள் இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது.
சுஷ்மாவும், ஷியாமும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், ஷியாமுக்கும் சுஷ்மாவுக்கும் இந்த ஆண்டு தல தீபாவளி அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக சொந்த ஊரான பார்வதிபுரம் பகுதிக்கு வந்திருக்கின்றனர். இவர் இருவரும் நேற்று காலை பொழுதில் காளிகேசத்தை சுற்றி பார்க்க சென்றிருந்தனர்.
காளிகேசப் பகுதியில் இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்த காரணத்தினால் ஆற்றில் வெள்ளம் அதிகளவில் வந்துள்ளது. ஆற்றின் கரையில் நின்று இருவரும் பேசிக் கொண்டு, செல்பி எடுத்து கொண்டு மகிழ்ந்தனர். அச்சமயத்தில் சுஷ்மா எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்து விட்டார்.
சுஷ்மாக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் கொஞ்ச கொஞ்சமாக மூழ்கத் தொடங்கி உள்ளார். தன் மனைவியை காப்பாற்றுவதற்கு ஷியாமும் ஆற்றில் திடீரென குதித்துள்ளார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் ஏற்பட்ட ஒரு சூழலில் எதிர்பாரத விதமாக சிக்கிக்கொண்டார். இவருக்குமே நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கிய சூழலில் இருந்து ஷியாமால் மீண்டு வெளியே வர முடியவில்லை.
நீண்ட நேரத்திற்கு பிறகு சுஷ்மா அப்பகுதியில் இருந்த செடி ஒன்றை பிடித்துக் கரைக்கு வந்து சேர்ந்தார்.ஷியாம் தனது மனைவி கண்ணெதிரே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த செய்தி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அந்த ஆற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஷியாம் பிணமாக மீட்கப்பட்டார். கணவரின் உடலை பார்த்து சுஷ்மா கதறி அழுத நிலை அங்குள்ளவர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் போலிசார் வழக்குப்பதிவு செய்ததுடன் விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.