நாக்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய காவல்துறை 18 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். மகாராஷ்டிரத்தில் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நாகபுரியில் கடந்த திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது.
இந்த கலவரம் தொடர்பாக 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக நகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. கலவரத்தின் சிசிடிவி காட்சிகளில் பதிவான 200 சந்தேக நபர்களை காவல்துறை அடையாளம் கண்டுள்ளது, மேலும் 1,000 பேரை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கணேஷ்பேத் மற்றும் கோட்வாலி காவல் நிலையங்களில் திங்கள்கிழமை ஐந்து முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டன, இதில் 200 பேர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். வன்முறையில் பங்கேற்றவர்களை அடையாளம் காண அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அந்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.
நாகபுரி வன்முறையைத் தொடா்ந்து சமூக ஊடகங்களில் மகாராஷ்டிர காவல்துறை கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. வகுப்புவாத பதற்றத்தைத் தூண்டும் நோக்கில் ஆட்சேபத்துக்குரிய கருத்துகளுடன் கூடிய 140-க்கும் மேற்பட்ட சமூக ஊடகப் பதிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read more: ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்!. குலுங்கிய கட்டிடங்கள்!. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!.