fbpx

‘அட்ஜஸ்ட்மெண்டுக்கு ஓகே சொல்லாததால் நடிகையை படத்தில் இருந்து தூக்கிய நகுல்’..!! உதவி இயக்குனர் பகீர் தகவல்..!!

தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நகுல். தற்போது இவரின் நடிப்பில் ‘வாஸ்கோடாகாமா’ திரைப்படம் தயாராகி வருகிறது. படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. கிருஷ்ணன். இந்தப் படத்தில் உதவி இயக்குனர் சந்த்ரு. இவர்தான் இப்போது நகுலை பற்றி கடுமையாக பேசி வருகிறார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக வாஸ்கோடாகாமா படத்தில் பணிபுரிந்திருக்கிறாராம் சந்த்ரு. அப்போது நகுலுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக பார்வையற்றவர்களுக்காக ஒரு படத்தில் நகுலை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து நகுலிடம் சந்த்ரு கேட்க, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆனால், படத்தின் இயக்குனரிடம் கோபமாக இதை பற்றி பேச படத்தில் இருந்தே தூக்கிவிட்டாராம் இயக்குனர். இந்த கோபத்தில் அந்த உதவி இயக்குனர் சந்த்ரு நகுலை பற்றிய அந்தரங்கள் எல்லாம் எனக்கு தெரியும் என்றும் அதை பற்றி புகார் அளிப்பேன் என்று கூறி வருகிறார். அந்தரங்கம் என்பது அவரது தனிப்பட்ட விஷயம்தானே என்று கேட்டால் அதற்கு சந்த்ரு சூட்டிங் ஸ்பாட்டில் செய்ததை சொல்வேன் எனக்கூறி வருகிறார். சரி அப்படி என்னதான் நடந்தது என்று கேட்டால், அதற்கு சந்த்ரு சொல்ல விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாஸ்கோடாகாமா படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தது இரவின் நிழல் புகழ் பிரிகிடாதானாம். கொஞ்ச நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம் பிரிகிடா. ஷூட்டிங்கிற்கு அவர் அப்பாவுடன் தான் வருவாராம். இது நகுலுக்கு சங்கோஜமாக இருந்திருக்கிறது. உடனே இயக்குனரை அழைத்து இனிமேல் அவர் அப்பா உடன் வந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று சொன்னதாகவும் அட்ஜெஸ்மெண்டுக்கும் பிரிகிடா ஒத்து வரமாட்டார் என்று நகுல் கூறியதாகவும் சந்த்ரு கூறியிருக்கிறார்.

அட்ஜெஸ்மெண்டுக்கு வளையாததால்தான் படத்தில் இருந்தே பிரிகிடாவை தூக்க வைத்தார் நகுல் என்றும் சந்த்ரு பகீர் குற்றச்சாட்டை கூறியிருக்கிறார். இது மட்டுமில்லை. இன்னும் நகுலை பற்றி நிறைய அந்தரங்கள் இருக்கின்றன. அதை எங்கு சொல்ல வேண்டுமோ அங்கு சொல்கிறேன் என்றும் கூறியிருக்கிறார். மேலும் ஆரம்பத்தில் ஒரு படத்தில் நடிக்க கேட்டு அதன் மூலம் வந்த பிரச்சனையால்தான் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கும் என்னை அழைக்கவில்லை. டைட்டிலிலும் என் பேர் போடவில்லை என்று சந்த்ரு கூறினார். கிட்டத்தட்ட 2 வருட உழைப்பு. என் பேரு போடலைனா எப்படி இருக்கும்..? இதற்கெல்லாம் காரணம் நகுல்தான் என்றும் இன்னும் என்னெல்லாம் சொல்லப் போகிறேன் பாருங்கள் என்றும் சவால் விட்டு பேசி வருகிறார் அந்த உதவி இயக்குனர் சந்த்ரு.

Read More : Gold Rate | இல்லத்தரசிகளே..!! தங்கம் விலை இன்றைக்கு எவ்வளவு தெரியுமா..?

English Summary

Chandru Bagheer also alleged that Nakul made Brigida leave the film because she was not open to adjustment.

Chella

Next Post

NEET UG 2024 | திருத்தப்பட்ட மதிப்பெண் முடிவுகளை வெளியிட்டது NTA..!! கவுன்சிலிங் விரைவில் தொடங்கும்

Sat Jul 27 , 2024
NEET UG 2024 revised scorecards released; counselling to begin soon

You May Like