fbpx

நளினிதான் முதல் குற்றவாளி… முன்னாள் போலீஸ் அதிகாரி பரபரப்பு புகார்…

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சமீபத்தில் விடுதலையான நளினியை குற்றவாளி என்று முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தவர்தான் பெண் காவல் அதிகாரி அனுசுயா. சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி ஏ1 குற்றவாளி அவருடன் சேர்ந்த 25 பேர் தூக்குத்தண்டனை கைதிகள். பின்னர் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் தண்டனை குறைக்கப்பட்டது. அவர்கள் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 31 ஆண்டுகளுக்கு மேலாக 7 தூக்கு தண்டனை குற்றவாளிகள் சிறை தண்டனை அனுபவித்து குற்றவாளிகளுக்கு சட்டம் சாதகமாக உள்ளதால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். என தெரிவித்தார்.

அவர் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் என்னை பற்றியும் பேசி இருக்கின்றார். நான் நளினியை சம்பவ இடத்தில் பார்க்கவே இல்லை என சொல்கின்றார். சிறப்பு நீதிமன்றத்தில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அதில் நான் தவறாக அடையாளம் காட்டியதாக அவர் கூறியுள்ளார். செல்வ லட்சுமி என்பவர் நளினியை போன்ற தோற்றத்தில் இருந்ததால் போலீஸ் உதவியுடன் நான் நளினியை அடையாளம் காட்டியதாக சிறையிலிருந்து வெளியாகிய பின்னர் கூறியிருக்கின்றார். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல் அதிகாரிகள், சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விடுதலை புலிகள் அமைப்பினர் அமர்ந்து இருந்தார்கள். இதில் எந்த 2 பெண்களை நான் அடையாளம் காட்டினேன்?. நளினியின் படம் எல்லா ஊடகத்திலும் 4 ஆண்டுகளாகவே வந்தது. எனவேஅவரை எளிதில் அடையாளம் காட்டலாம் எனவே நளினி கூறுவது பொய் என்று அனுசுயா கூறியுள்ளார்.

இரண்டாவதாக அவர் கூறிய பொய் இந்திரா காந்தி சிலைக்கு அருகில்தான் இருந்தேன் என கூறியிருக்கின்றார். பத்து மணிக்கு தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. அப்போது நளினி எதற்காக இந்திரா காந்தி சிலை அருகே சென்றார். எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Next Post

ஏர் இந்தியாவுக்கு 1.4 மில்லியன் டாலர் அபராதம்… ஏன் தெரியுமா?

Tue Nov 15 , 2022
பயணிகளுக்கு பணத்தை திருப்பி தருவதில் கால தாமதம் செய்ததாக ஏர் இந்திய விமான நிறுவனத்திற்கு அமெரிக்க போக்குவரத்து துறை 1.4 மில்லியன் டாலர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தபின்னர் குறிப்பிட்ட பயணிகளுக்கோ, பயணங்களில் ஏதாவது குறிப்பிட்ட மாற்றங்கள் செய்த பயணிகளுக்கு தொகையை திருப்பி தருவதில் ஏர் இந்தியா நிறுவனம் அதிக காலம் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. பெரும்பாலும் கொரோனா பெருந்தொற்றின் போது இது ஏற்பட்டுள்ளது. இந்த […]

You May Like