fbpx

கவனம்… இன்று காலை 9 முதல் 3 மணி வரை…! வேலைவாய்ப்பு இல்லாத நபர்கள் மிஸ் பண்ணிடாதீங்க…!

படித்து வேலை வாய்ப்பு இல்லா இளைஞர்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக, படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு & மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு திருவிழா நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரம் KSR தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திருவிழாவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சி மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா (ஆண்-பெண் இருபாலரும்) இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

வீட்டில் துடைப்பத்தை இப்படி வைத்தால், பணக்கஷ்டம் வரும்.. ஏன் தெரியுமா?

Sat Oct 7 , 2023
நமது வீட்டை சுத்தமாக வைத்து கொள்வதில் முக்கிய பங்கு வகிப்பது துடைப்பம். பலர் துடைப்பத்தை ஒரு பொருளாகவே மதிப்பதில்லை. கைக்கு வந்த இடத்தில் நாம் துடைப்பத்தை வைப்பது உண்டு. ஆனால் இது மிகவும் தவறான செயல். நாம் கண்ட இடத்தில் துடைப்பத்தை வைப்பதால் நமக்கு வறுமை வரும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?? ஆனால் அது தான் உண்மை. பொதுவாக லட்சுமி தேவி 108 பொருட்களில் வாசம் செய்வதாக […]

You May Like