அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள பிபர்ஜாய் புயல் குறித்த நிலைமை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவாகி தற்போது இந்த புயல் குஜராத் மாநிலம் துவாரகாவுக்கு தென்மேற்கில் 380 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது அது தீவிர புயலாக வலுவடைந்து ஜூன் மாதம் 15 ஆம் தேதி நன்பகல் குஜராத்தின் துவாரகாவுக்கு தெற்கு தென்மேற்கு பகுதியில் 380 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு இருக்கிறது இது ஆதி தீவிர புயலாக மாறி வரும் 15ஆம் தேதி மாண்டவி, பாகிஸ்தானின் கராச்சி இடையே சௌராஷ்ட்ரா கட்ச் பகுதியில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, குஜராத்தில் அரசு சார்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த புயல் குறித்த நிலைமை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன