fbpx

பாராசூட் மூலம் இன்று பூமியில் தரையிறங்குகிறது நாசா விண்கலம்..!! அப்படி என்ன சுமந்து வருகிறது தெரியுமா..?

எதிர்காலத்தில் பூமியைத் தாக்கும் என விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்ட பென்னு விண்கலின் மாதிரியை நாசாவின் விண்கலம் சேகரித்துள்ளது. அது இன்று பூமியில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆய்வில் தீவிரம் காட்டி வரும் நாசா, பூமிக்கு அருகில் உள்ள பென்னு என்ற விண்கல்லை ஆய்வு செய்வதற்காக ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2016ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பென்னு விண்கல்லில் இருந்து குறைந்தது 60 கிராம் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும். இதன் மூலம் சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும், அதன் ஆரம்பக் கட்டக் கோளுருவாக்கம், புவியில் உயிர்களின் தோற்றத்தை நிர்ணயிக்கும் கரிமச் சேர்மங்களின் மூலம் ஆகியவற்றை ஆராய உள்ளனர்.

ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம், 2 ஆண்டுகள், 2 கோடி கி.மீ. தூரம் பயணித்து 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி பென்னு என்ற விண்கல்லை நெருங்கியது. பென்னுவில் இருந்து 19 கிமீ தூரத்தை அணுகியது. அந்த தொலைவில் இருந்தபடியே பென்னுவை சூழ்ந்து ஆய்வு செய்து அங்கு மாதிரியை சேகரிக்கும் இடத்தை தேர்வு செய்தது. பின்னர், தரையிறங்காமல் மிக நெருக்கமாக சென்று இயந்திர கையை நீட்டி விண்கல்லில் உள்ள மாதிரியை சேகரித்துள்ளது.

2020இல் தனது இறுதிக்கட்ட பணியை நிறைவு செய்த ஓசிரிஸ் ரெக்ஸ், அந்த விண்கல்லின் மேற்பரப்பில் சேகரிக்கப்பட்ட மாதிரியுடன் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. விண்கலம் இன்று, தான் சேகரித்த மாதிரியுடன் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமியை விண்கலம் நெருங்கியதும் அதிலிருந்து விண்கல் மாதிரி வைக்கப்பட்ட கலன் (கேப்ஸ்யூல்) மட்டும் தனியாக பிரிந்து வரும். உட்டா மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாலைவனத்தில் பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் இந்த கேப்ஸ்யூலை விண்கலம் பிரித்துவிடும்.

கேப்ஸ்யூல் பாராசூட் மூலம் விழுந்ததும் அதனை பாதுகாப்பாக ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் சென்று ஆய்வு செய்யப்பட இருக்கிறது. இதற்கான ஒத்திகையை நாசா விஞ்ஞானிகள் சமீபத்தில் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்த பென்னு விண்கல் எதிர்காலத்தில் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

Chella

Next Post

இது தெரியாம போச்சே...! ஸ்மார்ட் போன், Internet இல்லாமல் UPI மூலம் பணம் செலுத்த முடியும்...! எப்படி தெரியுமா...?

Sun Sep 24 , 2023
இன்றைய காலத்தில் யுபிஐ என்பது டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாக உருவெடுத்துள்ளது. ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் நபர்கள் மட்டுமே யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் வசதி இருந்து நிலையில் தற்போது, Button போன் பயனர்கள் கூட இப்போது 123PAY என்ற யுபிஐ சிறப்பு சேவையை பயன்படுத்தலாம். UPI 123PAY ஆனது, பாதுகாப்பான மற்றும் வசதியான யுபிஐ கட்டணத்தை வழங்கும் அம்சத் தொலைபேசி பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட உடனடி […]

You May Like