டெல்லியில் ஜூலை 18ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களுக்கு மேல் உள்ளது, தற்பொழுது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய திட்டமிடலைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். கர்நாடகாவைத் தவிர, தென்னிந்தியாவின் மற்ற நான்கு மாநிலங்களில் பாஜக பலவீனமான நிலையில் உள்ளது.
தென் மாநிலத்தில் அதிக இடங்களை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் பாஜக இறங்கியுள்ளது. தற்பொழுது உள்ள கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல பாஜக திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கூட்டணி கட்சியாக இருக்கும் அதிமுகவை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.