நாட்டின் 76-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்த வகையில், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு, பூமியின் மேற்பரப்பில் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு தேசிய கொடியை ஏற்றியது. இந்தக் கொடியானது பூமியில் இருந்து 1,06,000 அடி உயரத்துக்கு பலூனில் பறக்கவிடப்பட்டது. இந்த நிகழ்வு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்..
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்பது “நாட்டிற்கு இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி, எல்லையற்ற உலகத்திற்கான விழிப்புணர்வை குழந்தைகளிடையே பரப்பும்” அமைப்பாகும். இந்த அமைப்பு சமீபத்தில் ஒரு செயற்கைக்கோளை லோ எர்த் ஆர்பிட்டில் ஏவியது. சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் இந்தியா முழுவதிலும் இருந்து 750 பெண் மாணவர்களால் இந்த AzadiSAT உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.