fbpx

இன்று இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்…! ஈரானிய அதிபர் மறைவுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்பு…!

ஈரானிய அதிபர் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கொடிகளை அரைக்கம்பத்தில் ஏற்றி, உத்தியோகபூர்வ கேளிக்கைகள் நிறுத்தப்பட்டு, இன்று இந்திய அரசு துக்க நாளாக அறிவிக்கிறது.

ஈரான்-அஜர்பைஜான் எல்லையில் நடந்த அணை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி அமைச்சர் ஹொசைன், கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் மாலேக் ரஹ்மதி மற்றும் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்துவிட்டு திரும்பி செல்லும்போது அடர்ந்த பணி இருந்ததன் காரணமாக அஜர்பைஜானின் ஜோல்ஃபா பகுதியில் கடந்த 19ஆம் தேதி ஹெலிகாப்டர் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து நேற்றைய தினம் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடம் கண்டறியப்பட்டு அதிபர் ரைசி, அவருடன் பயணித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஹூசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததால், மறைந்த பிரமுகர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இன்று (மே 21ஆம் தேதி) இந்தியா முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், மேலும் இன்றைய தினம் உத்தியோகப்பூர்வ பொழுதுபோக்கு எதுவும் இருக்காது என்று MHA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read More: ஈரானின் இடைக்கால அதிபராகும் முகமது மொக்பர்..! யார் இந்த மொக்பர்…! முழு விவரம்..!

English Summary

National flag will be flown at half-mast across India today…! Nationwide mourning for Iranian president’s death

Kathir

Next Post

கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம்....! பொது வருங்கால வைப்பு நிதி முக்கிய அறிவிப்பு...!

Tue May 21 , 2024
பொது வருங்கால வைப்பு நிதி வருடாந்தர கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதுநிலை துணை மாநிலக் கணக்காயர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து மத்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழக ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை, மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் […]

You May Like