fbpx

தேசிய கணித தினம் 2024!. ஈரோடு முதல் இங்கிலாந்து வரை காலத்தை வென்ற கணிதமேதை ராமானுஜர்!

National Maths Day 2024: சீனிவாச ராமானுஜர் 1887 டிசம்பர் 22 அன்று ஈரோட்டில் பிறந்தார். நிதி உதவி பெற்று கும்பகோணம் உயர் நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். அப்போதே கணித ஃபார்முலா பலவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவித்து ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனால் இவரை பலர் கணித மேதையாக கருதத் தொடங்கினார். தொடர்ந்து கும்பகோணம் அரசு கல்லூரி, சென்னை பச்சையப்பா கல்லூரியில் படித்தார். கணக்கு பாடத்தில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தார்.

படிப்பை முடித்த பின் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கணித தேற்றங்களை எழுதி கலக்கினார். ஒவ்வொரு நாளும் தனது கணித குறிப்புகளை, சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதிவைத்தார். அதுவே பிற்காலத்தில் “ராமானுஜன் கணிதம்” என்று புகழ்பெற்றது. கணிதம் சம்பந்தப்பட்ட நுாலினை 13 வயதில் இரவல் வாங்கி படித்தது முதல் அவரது மனம் கணிதத்தில் லயித்தது. இளைஞர் பருவத்தில் சென்னை துறைமுகத்தில் குமாஸ்தா வேலை பார்த்தார். லண்டனில் பிரபல கணித அறிஞர் ஹார்டிக்கு, தன்னுடைய கணித ஆர்வம் பற்றியும், மாணவராக சேர்ந்து பயில்வதற்கான விருப்பத்தையும் கடிதம் மூலம் எழுதினார்.

இந்திய மாணவர் சேர்க்கை அலுவலகம் மூலம், சென்னையில் வேலை பார்த்த ராமானுஜத்தின் அலுவலகத்திற்கு ஹார்டியின் இசைவு கடிதமும் அனுப்பப் பட்டது. ஆனால், ராமானுஜத்தின் குடும்ப சூழல் பற்றி நன்கு அறிந்த மற்றும் உடன் பணிபுரிந்த நாராயண அய்யர், ‘கடல் கடந்து செல்ல அக்கால பிராமணர்களுக்கு பழக்கம் இல்லை’ என்பதை மனதில் வைத்து, ‘நுழைவு இசைவு கிடைக்கவில்லை,’ என்று ராமானுஜத்திடமும், ‘சென்னையில் இருந்த இங்கிலாந்து மாணவர்கள் சேர்க்கை அலுவலகத்திற்கு கடிதமும் எழுதிவிட’ ராமானுஜத்தின் வறுமையும் வளர, அவரது வெளிநாடு செல்லும் கனவு தகர்ந்தது.

சென்னை துறைமுகத்தில் பணியில் இருந்த போதே ராமானுஜம் தன்னுடைய கணித பயிற்சிக்கும், சிந்தனைக்கும் அதிக கவனம் செலுத்தியதால் வறுமையில் வாடினார். தாமஸ் வாக்கர் என்ற பிரிட்டிஷ் அதிகாரி சென்னை வந்தபோது துறைமுகஅதிகாரி, ராமானுஜத்தை பற்றி எடுத்துக்கூறியதால், சென்னை பல்கலை மாதந்தோறும் 75 ரூபாய் ஊக்க தொகையோடு கணித ஆராய்ச்சி செய்ய வாய்ப்பும் வழங்கியது.

1909 ஜானகி என்பவர் மணந்தார் ராமானுஜர், மனைவியின் அறிவுறுத்தலின் பேரில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார் ராமானுஜன். வேலை பார்த்துக்கொண்டே இவர் ஆற்றிய கணிதப் பணிக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து இவருக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்ற ராமனுஜன், உதவித்தொகையின் மூலம் டிரினிடாட் கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டார்.

தனது வாழ்நாளில் ஆறாயிரம் தேற்றங்கள் அடங்கிய நுாலினை எழுதி, அறிஞர்களை வியக்க செய்தவர் இவர். ‘ஜீரோவிற்கும் மதிப்புண்டு’ என கூறியவர். சிறிய வயதில் இருந்து தெய்வ பக்தியில் திளைத்தவர். அதனால்தான் லண்டன் செல்ல வாய்ப்பு கிடைத்ததும், தமது குல தெய்வமான நாமக்கல் தாயார் சன்னதி சென்று உத்தரவு பெற்று சென்றார்.

அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலகளவில் தலைநிமிரச் செய்தார். சில காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இந்தியா திரும்பி அவர் 1920-ல் மறைந்தார். 33 வயதில் மரணத்தைத் தழுவியபோதும் அவருடைய புகழ் உலகச் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ராமானுஜரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும், அவர் பிறந்த தினமான டிசம்பர் 22ம் தேதியை தேசிய கணித தினமாகவும் அரசு அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் 22ம் தேதி கணித தினம் கொண்டாடப்படுகிறது.

Readmore: ஸ்மார்ட்வாட்ச் பட்டைகளில் தீங்கு விளைவிக்கும் ரசாயணங்கள் கண்டுபிடிப்பு..!! – ஆய்வில் அதிர்ச்சி

Kokila

Next Post

இப்படி ஒரு திட்டமா...? பன்றி வளர்க்கும் நபர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மானியம் & கடன்...! முழு விவரம்

Sun Dec 22 , 2024
Subsidies and loans provided by the Tamil Nadu government for infrastructure facilities and purchase of pigs.

You May Like