மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மூத்த குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்காக 1999-ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான நிதி மற்றும் உணவுப் பாதுகாப்பு, உடல்நலன், இருப்பிடம், இதர தேவைகள், தாக்குதல் மற்றும் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சேவைகள் ஆகியவை இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
மேற்கத்திய நாடுகளை ஒப்பிடுகையில் வயதானவர்களை பராமரிப்பதில் இந்தியாவில் உள்ள குடும்பங்கள் இன்றும் முதல் பராமரிப்பாளர்களாக உள்ளன. மூத்த குடிமக்களுக்கான மத்திய அரசின் ஒருங்கிணைந்த திட்டம், மூத்த குடிமக்களுக்கான நலன் நிதி, மூத்த குடிமக்களுக்கான தேசிய உதவி எண் (14567), முத்த குடிமக்களுக்கான மாநிலப் பணிக்குழு உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.