மத்திய அரசுக்கு எதிராக பிப்.16ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் முடிவு செய்துள்ளனா்.
மத்திய அரசைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் சாா்பில் அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் பிப்.16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்களும் பங்கேற்பார்கள் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் ரயில்வே, தபால் உள்ளிட்ட சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.