மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டதால், ரூ.48,000 வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது..
ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. இது முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாகக் கொண்டது.
ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு அகவிலைப்படி விகிதம் அரசாங்கத்தால் திருத்தப்படுகிறது.. அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த செப்டம்பர் 28 அன்று மத்திய அரசு அறிவிக்கும் என்று கூறப்பட்டது.. மேலும் இந்த முறை 4% அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று தொடர்ந்து தகவல் வெளியான வண்ணம் இருந்தன.. இதனால் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புக்கு மத்திய அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்..
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று அறிவித்தார். இதனால் தற்போது 34%ஆக உள்ள அகவிலைப்படி உயர்வு, 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 38 சதவீததமாக அதிகரித்துள்ளது.. எனவே ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு இப்போது மாதத்துக்கு ரூ.720 அல்லது ஆண்டுக்கு ரூ.8,640 ஆக உயர்வு கிடைக்கும்.
ரூ.25,000 அடிப்படைச் சம்பளம் பெறுபவர்கள், ரூ.1,000 அதிகமாகப் பெறுவார்கள்.. ரூ.50,000 அடிப்படைச் சம்பளம் உள்ளவர்களுக்கு ரூ.2,000 மாதாந்திர உயர்வை எதிர்பார்க்கலாம். ரூ.1,00,000 அடிப்படை சம்பளத்திற்கு, 4 சதவீத உயர்வுடன் உயர்த்தப்பட்ட தொகை மாதம் ரூ.4,000 அல்லது ஆண்டுக்கு ரூ.48,000 கிடைக்கும்..