fbpx

பிரதமர் மோடி எழுதிய நவராத்திரி பாடல்!… 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து அசத்தல்!

நவராத்திரி திருவிழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கர்பா பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

நவராத்திரி விழாவுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி ஒரு பாடலை எழுதினார். இந்நிலையில் அந்தப் பாடலுக்கு இசையமைத்து வீடியோ ஆல்பமாக வெளியிடப்பட்டுள்ளது. 190 விநாடிகள் ஓடக்கூடிய இந்த பாடல், கர்பா வகைப் பாடல் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல் நேற்று டெல்லியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பாடகி த்வனி பனுஷாலி குரலில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு இசை அமைப்பாளர் தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். இப்பாடல் கலாச்சார பன்முகத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

இந்தப் பாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “இந்தப் பாடல் எனக்கு பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. நான் பல ஆண்டுகளாக எழுதவில்லை. தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாகும். கடந்த சில நாட்களாக ஒரு புதிய கர்பா பாடலை என்னால் எழுத முடிந்தது. அதை வரும் நவராத்திரி திருவிழாவின்போது பகிர்ந்து கொள்கிறேன். பாடகி த்வனி பனுஷாலி, இசையமைப்பாளர் பாக்சி ஆகியோருக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் பணி யாற்றியது குறித்து இப்பாடலின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியுடன் பணியாற்றியது எனக்கு பெருமை. இந்தப் பாடல் அருமையாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடித்த வகையில் பாடல் அமைந்துள்ளது” என்றார். பாடல் குறித்து பாடகி த்வனி பனுஷாலி கூறும்போது, “மீண்டும் பிரதமர் மோடியுடன் ஒரு புதிய பாடலுக்கு கூட்டணி அமைக்க விரும்புகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Kokila

Next Post

அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு தள்ளிவைப்பு..! மாணவி விபரீத முடிவு! விடிய விடிய போராட்டம்!

Sun Oct 15 , 2023
தெலுங்கானாவில் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு தள்ளிவைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டதால் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுகள் நவம்பர் 2,3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6,7 ஆகிய தேதிகள் நடத்தப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு அறிவித்தது. […]

You May Like