fbpx

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா..? விக்னேஷ் சிவன் தான் காரணமா..?

சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர், தனது காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு அழகான ஆண் குழந்தைகளும் உண்டு. சமீபத்தில் தான் தனது இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினார். மேலும், அவர்களுக்காக பல தொழில்களை ஆரம்பித்து சொத்தினை சேர்த்தும் வருகிறார்.

இப்படியான நிலையில், நடிகை நயன்தாரா திடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அவரது கணவர் விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்டதால் நயன்தாராவுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்ததாகவும், இதனால் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எனினும், மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த சில மணி நேரங்களில், நலமாகிவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து இது தொடர்பான எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

Chella

Next Post

’சரக்கு அடிச்சிட்டு தான் அந்த காட்சியில நடிப்பேன்’..!! ’ஆல்கஹால் ரத்தத்திலேயே ஊறிப்போச்சு’..!! மனம் திறந்த மனிஷா கொய்ராலா..!!

Tue Oct 24 , 2023
90 மற்றும் 2000ம் காலகட்டங்களில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. நேபாள-இந்திய நடிகையான இவர், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மணிரத்தினத்தின் பம்பாய் படம் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய நடிகையானார். இதை தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தனர். பின்னர் பாபா, ஆளவந்தான் உள்ளிட்ட படங்கள் மிதமான வரவேற்பையே பெற்றிருந்தது. […]

You May Like