செங்கல்பட்டு மாவட்டம் இசிஆர் சாலையில் உள்ள நெம்மேலி என்ற கிராமத்தில் வயதான தம்பதியின் அருட்படுவோலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இ சி ஆர் சாலையை ஒட்டிய முந்திரி தோப்பு என்ற பகுதியில் வசித்து வந்தவர் சகாதேவன் வயது 92 இவரது மனைவி ஜானகி அம்மாள் இந்த தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என அனைவருக்கும் திருமணமாகி அருகில் உள்ள ஊர்களில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தம்பதியினர் மட்டும் முந்திரி தோப்பில் தங்கள் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்களது பிள்ளைகள் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தாய் தந்தையரை பார்த்து கவனித்து விட்டு செல்வார்கள். இதேபோன்று நேற்று இரவு அவரது மகன் இவர்களைக் காண வீட்டிற்கு வந்திருக்கிறார். வீட்டில் பெற்றோர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் தேடிய போது சகாதேவன் மர்மமான முறையில் இருந்து கடந்தது தெரியவந்துள்ளது. ஆனால் வீடு எங்கும் தேடியும் அவரது தாயாரை காணவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை சகா தேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. மேலும் காணாமல் போன ஜானகி அம்மாளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் முந்திரி தோப்பில் ஒரு புதருக்கு அருகே கழுத்து அறுபட்ட நிலையில் பணமாக கடந்துள்ளார் ஜானகியம்மாள். மேலும் அவர் அணிந்திருந்த ஐந்து பவுன் நகைகளும் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றிய காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தனியாக இருந்த தம்பதிகளை நகைக்காக மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர் அல்லது வேறு எனும் காரணம் இருக்கிறதா என்று கோணத்தில் விசாரித்து வருகிறது காவல்துறை!