fbpx

மருமகளின் அந்தரங்க உறுப்பு, கண், காதில் ஆசிட் ஊற்றிய மாமியார்! மேலும் கொசு மருந்தை அடித்து கொலை செய்ய முயன்ற கொடூரம்!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உறங்கிக் கொண்டிருந்த மருமகளின் கண்களில் மாமியார் ஆசிட் ஊத்திய விவகாரம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே வசித்து வருபவர் முகேஷ் ராஜ் இவருக்கும் கிருத்திகா என்ற பெண்மணிக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் .முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கிருத்திகா மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விருதாச்சலத்தில் வசித்து வருகிறார். முகேஷ் ராஜின் தாயார் ஆண்டாள் வயது 55. இவருக்கும் முகேஷ் ராஜின் மனைவி கிருத்திகா விற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ஆண்டாள் அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை உறங்கிக் கொண்டிருந்த கிருத்திகாவின் மீது கழிவறைக்கு ஊத்த பயன்படும் ஆசிட்டை எடுத்து கிருத்திகாவின் முகம் கை கால் அந்தரங்க உறுப்புகள் என உடல் பகுதிகள் முழுவதும் ஆசிட்டை ஊற்றி இருக்கிறார் அவரது மாமியார் ஆண்டாள். மேலும் கொசு மருந்தை வாயில் ஊற்றி அவரை கொலை செய்யவும் முயன்று இருக்கிறார். ஆசிட் ஊற்றியதால் வலியால் அலரி துடித்த கிருத்திகாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். ஆசிட் ஊற்றியதால் அவரது வலது கண் பார்வை முற்றிலுமாக பறிபோனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. மருமகள் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயன்ற ஆண்டாளை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Rupa

Next Post

"துபாயிலிருந்து காதலனை காண வந்த இடத்தில்........"! 4 வது மாடியிலிருந்து விழுந்த விமான பணிப்பெண்!காதலன் கைது!

Mon Mar 13 , 2023
இமாச்சலப் பிரதேசத்தைச் சார்ந்த 28 வயது பணிப்பெண் ஒருவர் தனது காதலனை சந்திக்க வந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் அந்த பெண்ணின் காதலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சர்வதேச விமான நிறுவனத்தில் பணி பெண்ணாக பணிபுரியும் 28 வயது இளம் பெண் ஒருவர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் தனது காதலனை […]

You May Like