fbpx

மெட்ரோ அருகே, சூட்கேசில் பெண் சடலம்… அதிர்ச்சியில் காவல்துறை..! சிசிடிவி காட்சிகள் ஆய்வு.!

மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பை மத்திய பகுதியின் குர்லா ஏரியாவில் ஜி எஸ் டி ரோடு அருகே மெட்ரோ ரயில் ப்ராஜெக்ட் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் கிடைப்பதாக காவல்துறைக்கு ஏற்றுமதியும் 12 மணி அளவில் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மும்பை போலீசார் வரைந்தனர்.

அங்கு சென்ற காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதில் இறந்த பெண் ஒருவரின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண் யார்.? என்று அடையாளம் காணப்படவில்லை. அவர் 25 முதல் 35 வயதுக்குள் இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பெண் டி-ஷர்ட் மற்றும் ட்ராக் பேண்ட் அணிந்து இருந்ததாகவும் தெரிவித்தனர் அவர் ஏன் கொலை செய்யப்பட்டார்.? எதற்காக சூட்கேசில் அடைக்கப்பட்டார்.? அவரை கொலை செய்தது யார்.? என்பது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

Kathir

Next Post

உரிமைத்தொகை..!! பொங்கல் பண்டிகைக்கு முன் பெண்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

Tue Nov 21 , 2023
மகளிர் உரிமைத்தொகை திட்டமானது கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கப்படும் என்று 2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் முகாமும் மாநிலம் முழுவதும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெற்றது. இத்திட்டத்தில் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்தனர். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு மணியார்டர்கள், வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.1,000 வழங்கப்பட்டது. இதற்கிடையே, இத்தொகையை பெற […]

You May Like