fbpx

திண்டிவனம் அருகே திருடிய வீட்டில் ‘ஏர் கண்டிஷனருக்கு’ தீ வைத்த திருடன்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் திருட்டு நடைபெற்ற வீட்டில் ஏசி எறிந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட திண்டிவனத்தை சேர்ந்தவர் முகமது ஆசிக். இவர் அப்பகுதியில் உள்ள பெட் மார்ட்டில் பணியாற்றி வருகிறார். தனது மனைவியை சொந்த ஊருக்கு பிரசவத்திற்கு அழைத்துச் சென்ற அவர் 10 நாட்களுக்குப் பின் திரும்பி வந்தார். சிறிது நேரம் மட்டுமே தனது வீட்டிலிருந்து விட்டு மீண்டும் பணிக்கு சென்று விட்டார் ஆசிக். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதை சோதனை செய்து பார்த்தபோது பத்து சவரன் நகை மற்றும் ஐயாயிரம் ரூபாய் ஆகியவை திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் இருந்து புகை வருவதை கவனித்த அவர் மேலும் உள்ளே சென்று பார்த்த போது மிகவும் புகைமூட்டமாக இருப்பதைக் கண்டு பயந்து வெளியே ஓடி வந்தார் இதனை கவனித்த அக்கம் பக்கத்தினரும் இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர் .

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். அதன் பிறகு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ஏசி தீ பற்றி எரிந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. ஏ சி தீ பற்றி எரிந்ததனால் வீட்டிலிருந்த கட்டில் மெத்தை இன்வெர்ட்டர் வாஷிங் மெஷின் உள்ளிட்ட சாதனங்களும் எறிந்திருக்கின்றன. இதன் காரணமாகவே மிகப்பெரிய புகைமண்டலம் உருவானதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. அந்த வீட்டிலிருந்த ஏர் கண்டிஷனர் பழுது காரணமாக தீப்பற்றி எறிந்ததா? அல்லது திருடர்கள் தப்பிச் செல்வதற்காக ஏசியை கொளுத்தினார்களா? என்பது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

Baskar

Next Post

̓நாளைக்கு திருமண வரவேற்பு! புதுமண தம்பதிகள் சடலமாக மீட்பு! சத்தீஸ்கரில் அதிர்ச்சி!

Wed Feb 22 , 2023
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு சற்று முன்பு புதுமணத் தம்பதிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் உள்ள பிரிஜ்நகர் என்ற இடத்தில் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பாக திக்ரபரா காவல்துறையினர் உனக்கு பதிவு செய்து இறந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர்களின் பெயர் […]

You May Like