தனது கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க வந்த திருடர்களிடம் “ஏலே, அது பித்தளைச் செயின்” என ஒரு மூதாட்டி கூறியதால் அந்தத் திருடர்கள் செயினை போட்டுவிட்டு விரக்தியில் சென்றுள்ளனர். இந்த சுவாரசியமான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று இருக்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரம் பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி கணபதி. இவர் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு திருடர்கள் இவர் அணிந்திருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது தனது செயினை இறுக்கமாக பற்றிக் கொண்ட பாட்டி “ஏலே அது பித்தளை செயின் லே” என கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த திருடர்கள் அந்தச் செயினை போட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை அந்த மூதாட்டி தனது ஊர் மக்களிடம் இயல்பாக வட்டார மொழியில் விவரிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அந்த வீடியோவில் திருநெல்வேலி வட்டார வழக்கில் இயல்பாக நகைச்சுவையுடன் பேசும் பாட்டி பித்தளை சையினை தங்கம் முலாம் பூசி வைத்திருக்கிறேன் அத போய் திருட வந்திருக்கிறார்கள் என்று நகைச்சுவையுடன் கூறுவது தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.