fbpx

விருதுநகர் அருகே…..! சகோதரியின் கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த துணை ராணுவ படை வீரர் அதிரடி கைது……!

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற 7000 பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார் இவருக்கு தேவி என்ற மனைவியும் இருக்கிறார் ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் பாலமுருகன் 7000 பண்ணை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் அந்த பகுதிக்கு வந்த தேவியின் சகோதரனான துணை இராணுவ படை வீரர் மணிமாறன் பாலமுருகனை அடித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாலமுருகன் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்க பதிவு செய்த காவல்துறையினர் மணிமாறனை கைது செய்துள்ளனர்.

Next Post

யோவ் நீங்கல்லாம் எங்கிருந்துய்யா வர்ரிங்க…..? திருப்பூர் அருகே குடிக்க பணம் தராததால் வீட்டுக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்த இளைஞர்……!

Fri Jun 30 , 2023
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் வசித்து வந்த தம்பதி தெய்வசிகாமணி, யசோதா. இந்த தம்பதிகளுக்கு சுரேஷ் (25) தினேஷ்குமார் (20) என்ற மகன்களும் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 6️வருடங்களுக்கு முன்னர் தெய்வசிகாமணியும், 2 வருடங்களுக்கு முன்னர் யசோதாவும் மரணம் அடைந்துவிட்டனர். ஆகவே குமார் நகர் மிலிட்டரி காலனியில் உள்ள பாட்டி வள்ளியம்மாளுடன் சுரேஷ் மற்றும் தினேஷ்குமார் உள்ளிட்ட இருவரும் வசித்து வந்தனர். அதோடு அந்த பகுதியில் இருக்கின்ற பனியன் […]
சொந்த ஊருக்கு திரும்பிய உடனே..!! நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு..!! பதறியடித்து ஓடிய உறவினர்கள்..!! அதிர்ச்சி

You May Like