fbpx

’அலட்சியம் காட்டும் அதிகாரிகள்’..!! அதிரடி உத்தரவை போட்ட பதிவுத்துறை..!! பொதுமக்கள் நிம்மதி.!!

தமிழ்நாட்டில் பத்திரப்பதிவில் தவறுகள் நடைபெற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜிக்களிடம் புகார் அளிக்கின்றனர். புகார்களை முறையாக பதிவு செய்து விசாரிக்க வேண்டியது மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜி-களின் பொறுப்பாகும். ஆனால், பொது மக்களின் புகார்களை அதிகாரிகள் அலட்சியமாக கிடப்பில் போடுவதாக புகார் எழுந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் நோட்டீசுகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதால் உரிய காலத்தில் அதிகாரிகள் பதிலளிக்காமல் நீதிமன்றத்தின் அதிருப்திக்கு பதிவுத்துறை ஆளாகியுள்ளது. இந்நிலையில், புகார்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான கடிதங்கள் கிடப்பில் போடப்படுவதால், சிக்கல்கள் ஏற்படுகிறது. வழக்குகள் தொடர்பான குறிப்புகளை அனுப்பும் அதிகாரிகள் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதே சமயம் குறிப்பு ஆவணங்களில் அதனை அனுப்பும் அதிகாரியின் விவரங்கள் முறையாக இடம் பெற வேண்டும். புகார்கள் மற்றும் வழக்கு கடிதங்களில் டிஐஜி-கள் மிக கவனமாக செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதே சமயம் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

காவிரி நீர் கிடைக்க கர்நாடகாவுக்கு ராணுவத்தை அனுப்புங்கள்..!! கொந்தளித்த ஈஸ்வரன்..!!

Mon Oct 16 , 2023
ஆத்தூரில், சேலம் கிழக்கு மாவட்ட கொ.ம.தே.க., இளைஞர் அணி கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலர் ஈஸ்வரன் பேசுகையில், ”நாமக்கல், ஜேடர்பாளையத்தில் தொடர்ந்து பிரச்சனை எழுந்து வருவதால், குற்றவாளிகள் வெளியே உள்ளது தெரிகிறது. கொங்கு மண்டலத்தில் பணம், நகைக்கு முதியவர்கள் கொலை உள்பட பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும். தமிழக சமூகநீதி கொள்கை வடமாநிலங்களில் பரவுவதால், பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டு விமர்சனம் […]

You May Like