முக்கிய அறிவிப்பு: பள்ளிகள் திறந்த முதல் நாளே… ஆதார் பதிவு தொடக்கம்…!

அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் ஆதார் எண் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், அதற்கான முன்னேற்பாடுகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு தொடங்கப்படும்.

பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது ஆதார் பதிவு மற்றும் புதுப்பிக்க நிரந்தர ஆதார் மையத்திற்கு செல்வதை தவிர்க்கும் பொருட்டு, மாணக்கார்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் எண் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலை மேற்கொண்டு பயன்பெற “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” சிறப்பு முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முகாமை பயன்படுத்திக்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண் பெற்றுத்தர அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பசும் பால் Vs எருமை பால்…! எந்த பால் உடல்நலத்திற்கு உகந்தது?

Thu May 30 , 2024
பசும்பால் மற்றும் எருமைபால் ஆகிய இவை இரண்டிலும் எது ஆரோக்கியம் நிறைந்த பால் என்பது குறித்து பார்க்கலாம். பால் என்பது நமது அன்றாட உணவில் பயன்படுத்தக் கூடிய ஒன்று. பசு மாட்டு பால், எருமை மாட்டு பால், ஆட்டுப்பால் போன்ற விலங்களில் இருந்து நமக்கு பால் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், சோயா மற்றும் பாதாம் பால் போன்ற தாவர மூலங்களிலிருந்தும் நமக்கு பால் கிடைக்கிறது. ஒவ்வொரு வகையான பாலிலும் ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. […]

You May Like