ஆர்பி உதயகுமாருக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “எம்ஜிஆர் காலத்தில் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் அதிமுகவுக்கு உழைக்கும் தொண்டன் தான் செங்கோட்டையன். கட்சி ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும் என்பதை அதிமுகவினர் அனைவரும் உணர்ந்துள்ளனர்.
கட்சியின் உண்மையான தொண்டர்கள் எங்களிடம் தான் இருக்கின்றனர். அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது ரகசியம். ஒரு சில ரகசியங்களை வெளியில் சொல்ல முடியாது. அது அதிமுக இணைப்புக்கு தடையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ”ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. அவர் பேசுவதை பேசட்டும். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். தனது கடைசி காலத்தில் ஓபிஎஸ் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. அப்போது, ஓபிஎஸ் மீது வைத்திருந்த அபிமானத்தை பற்றி என்னிடம் ஜெயலலிதா பகிர்ந்து கொண்டார். அதை வெளியே சொன்னால், நாகரிகமாக இருக்காது. எனக்கு எச்சரிக்கை விடுக்கும் தகுதி உங்களுக்கு இல்லை” என்று என்று கடுமையாக பேசியிருந்தார்.
Read More : ’அப்பா என்று சொல்லிவிட்டு பிள்ளைகளை இப்படித்தான் குடிக்க வைப்பீங்களா’..? CM-ஐ அட்டாக் செய்த சீமான்..!!