fbpx

ராணுவத்தில் சேரமுடியாததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை ….

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அகே இளைஞர் ஒருவர் ராணுவத்தில் சேர முடியாததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வீரவநல்லூர் காவல் சரகத்திற்குட்பட்ட மேலப்புதுக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(19) . தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ராணுவத்தில் பணியாற்ற திட்டமிட்டுள்ளார். இதனால் அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விண்ணப்பித்தார். இதற்காக நடத்தப்பட்ட எழுத்து மற்றும் உடற்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால் , மருத்துவ பரிசோதனையில் கண் பார்வை சோதனையின்போது குறைபாடு இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர் நிராகரிக்கப்பட்டார். தான் ராணுவத்திற்கு தேர்வாகவில்லையே என்ற விரக்தியில் , இருந்துள்ளார் சதீஸ்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

சிறுவர் குற்றங்களை தடுக்க "சிற்பி" திட்டத்தை.... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

Wed Sep 14 , 2022
சென்னையில் பெருகிவரும் குற்றச்செயல்களைத் தடுக்க மாநகர காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சிறுவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், பாதிக்கப்படக் கூடிய சிறுவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வழிகாட்டவும், “சிற்பி” என்ற திட்டத்தை, சென்னை மாநகர காவல்துறை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் படி சென்னையில் 100 பள்ளியில், தலா 50 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மாணவர்களுக்கு […]

You May Like