fbpx

நெட்டிசன்கள் கலாய்க்கும் வந்தே பாரத் ரயில், நாளைக்குதான் பயன்பாட்டுக்கே வர போகுதா..!

தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை- டூ -கோவை மற்றும் சென்னை- டூ -மைசூரு ஆகிய ரூட்களிலேயே அந்த வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த இரு வந்தே பாரத் ரயில்களுடன் விரைவில் இன்னும் சில புதிய வந்தே பாரத் ரயில்கள் இணைக்கப்பட உள்ளன. அதில் ஒன்றே சென்னை-விஜயவாடா இடையில் இயங்க இருக்கும் புதிய வந்தே பாரத் ரயில் ஆகும். இது இணையும் பட்சத்தில் சென்னையில் இருந்து இயங்கும் மூன்றாவது வந்தே பாரத் ரயிலாக அது மாறும். இதனை நாளை (ஜுலை 7) இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க இருக்கின்றார்.

இந்த நிலையில் இன்னும் பயன்பாட்டிற்கே வராத இந்த ரயிலை நெட்டிசன்கள் சிலர் சொல்லால் அடிக்க தொடங்கி இருக்கின்றனர். அதாவது, கிண்டலடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் கற்கலால் இந்த ரயில் அடிப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. உள்நாட்டிலேயே வைத்து தயாரிக்கப்படும் மிக முக்கியமான ரயிலாக வந்தே பாரத் ரயில்கள் உள்ளன. உலக நாடுகள் சிலவற்றில் உள்ள ரயிலையே மிஞ்சும் வகையில் இதில் சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய ரயிலையே நெட்டிசன்கள் தற்போது கலாய்க்கத் தொடங்கி இருக்கின்றனர். அதுவும் இன்னும் பயன்பாட்டிற்கே வராத நிலையில் அதை கலாய்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இதற்கான காரணம் அதன் வேகம் ஆகும். வந்தே பாரத் ரயில்கள் என்னமோ மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய திறனைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவை தற்போது அதிகபட்சமாக 130 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றன. அதேவேளையில், அனைத்து ரூட்களிலும் இதே வேகத்திலேயே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வழித் தடத்தைப் பொருத்து வந்தே பாரத் ரயில்களின் வேகம் மாறுபடும். இதற்கு மிக மோசமான இருப்புப் பாதையே காரணமாக இருக்கின்றது. அந்தவகையில், தமிழகத்தில் இருந்து இயக்கப்பட இருக்கும் சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரயில் மணிக்கு 100 கிமீ வேகம் முதல் 110 கிமீ வேகம் வரை இயக்கப்படும் என கூறப்படுகின்றது.

ஆகையால், இந்த வழித்தடத்தில் ஓர் இலக்கில் இருந்து மற்றொரு இலக்கை அடைய வந்தே பாரத் ரயில் சுமார் 6.30 மணி நேரங்களை எடுத்துக் கொள்ளும் என தெரிகின்றது. இதுவே நெட்டிசன்கள் சென்னை-வந்தே பாரத் ரயிலை கலாய்க்க முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. ஏனெனில், ஏற்கனவே இந்த வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் சில ரயில்கள் வந்தே பாரத் ரயிலைவிட அதிக வேகத்தில் இயங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றன. அதாவது வந்தே பாரத் ரயிலைவிட விரைவாக இந்த இலக்குகளை அடையக் கூடியவையாக இருக்கின்றன. இவற்றைவிட அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடியதாகவே விரைவில் வரவிருக்கும் வந்தே பாரத் ரயில் இருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே பலரிடம் இந்த ரயில் சொல்லால் அடிபட தொடங்கி இருக்கின்றது.

சென்னை-நெல்லை இடையிலும் ஓர் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாகவே சென்னை-திருப்பதி வந்தே பாரத் ரயில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால் இந்த ரயில் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு சென்னை வாசிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Maha

Next Post

வந்தே சாதாரன் என்ற புதிய ஏசி இல்லாத சாதாரண ரயிலை உருவாக்க திட்டம்..!

Thu Jul 6 , 2023
வந்தே பாரத் போல வந்தே சாதாரன் என்ற ஏசி அல்லாத நவீன வசதிகள் கொண்ட புதிய ரயில் பெட்டிகளை தயாரிக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நீண்ட தூர பயணத்திற்காக ஸ்லீப்பர் வசதிக்களுடன் கூடிய இந்த ரயிலை சென்னையில் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள். இந்தியாவில் வந்தே பாரத் ரயில்கள் தற்போது பெரும் புரட்சியை செய்து வருகிறது என்றால் அது மிகையல்ல. […]

You May Like