fbpx

‘எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!!’ TVK- க்கு இப்படி ஒரு அர்த்தமா? தளபதியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

சமீபத்தில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல் தான் என்றும் அதிரடியாக அறிவித்தார். மேலும், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தை தவிர, ஏற்கனவே கமிட்டான ஒரு படத்தையும் முடித்து விட்டு முழு நேர அரசியலில் இறங்கப்போவதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடினார். பல பிரபலங்கள் விஜய்யுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இதில் திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரின் ட்வீட் ஹாட் டாப்பிக்-ஆ உள்ளது.  விஜய்யுடன் நெருக்கமாக அதுவும் ஒரே கலர் உடை அணிந்த போட்டோவை கீர்த்தி வெளியிட்டார். அதற்கு போட்டியாக த்ரிஷாவும் விஜய்யுடன் இருக்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்தார்.

அதனைத்தொடர்ந்து, திரிஷா விஜய் கீர்த்தி இதுதான் TVK -ன் விரிவாக்கம் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். உண்மையில் இதற்கு பின்னால் மிகப்பெரும் அரசியல் இருக்கிறது. விஜய்யின் வளர்ச்சியை தடுக்க தான் இது போன்ற விஷயங்களை பரப்பி வருவதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Read more ; ஆதார் கார்டு வாங்கப்போறீங்களா..? இதுதான் பெஸ்ட்..!! UIDAI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

Actor Vijay recently announced his political entry. He started a party named Tamil Nadu Victory Kazhagam. He also aggressively announced that his target is the 2026 assembly elections.

Next Post

சுறா கடித்ததில் "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" பட நடிகர் உயிரிழப்பு..!

Mon Jun 24 , 2024
"Pirates of the Caribbean" actor died after being bitten by a shark..!

You May Like