சமைக்காமல் சில உணவுகளை பச்சையாக சாப்பிடுவது பிரபலமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இது ஆரோக்கியமானது மற்றும் அதிக ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கிறது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் சில உணவுகளை பச்சையாக உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.
சில சமைக்கப்படாத பொருட்களில் நச்சுப் பொருட்கள், ஆபத்தான கிருமிகள் அல்லது சிறிய இரைப்பை குடல் பாதிப்பு முதல் கொடிய நோய்கள் வரை எதையும் ஏற்படுத்தக்கூடிய பிற பொருட்கள் உள்ளன. உணவின் பாதுகாப்பிற்கு சமையல் அவசியமானது, ஏனெனில் இது ஆபத்தான சேர்மங்களை நடுநிலையாக்குகிறது, நுண்ணுயிரிகளை நீக்குகிறது.
குறிப்பாக இறைச்சி மற்றும் முட்டைகள், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை சரியாக சமைக்க வேண்டும். நீங்கள் சமைக்காமல் சாப்பிடக் கூடாத பல பொதுவான உணவுகளுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்களை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், பாதுகாப்பான, சமச்சீரான உணவை உண்ணவும், இந்த அபாயங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
முட்டைகள்: பச்சை முட்டையில் உணவு விஷத்தை ஏற்படுத்தும் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா இருக்கலாம். எனவே முட்டையை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் காய்ச்சல், வயிற்றில் பிடிப்பு, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படலாம்.
காளான்கள் : சில வகையான காளான்கள் பச்சையாக சாப்பிட பாதுகாப்பானவை என்றாலும், சில வகை காளான்களில் நச்சுகள் உள்ளன. இந்த காளான்களை சமைக்காலம் பச்சையாக சாப்பிடுவதால் உறுப்பு சேதம், குமட்டல் மற்றும் வாந்திக்கு வழிவகுக்கும். உதாரணமாக, அமானிதா மற்றும் பிற காட்டு காளான்கள் ஆபத்தானவை. காளான்களை சமைத்து சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. நச்சு இரசாயனங்களை நடுநிலையாக்க உதவுகிறது.
முந்திரி: முந்திரியில் சில வகை நச்சுக்கள் உள்ளது. இதனை பச்சையாக சாப்பிடும் போது தோல் வெடிப்பு மற்றும் சுவாசக் கோளாறு உட்பட கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படலாம்.. முந்திரியை பச்சையாக சாப்பிடுவதற்கு பதில் வறுத்து சாப்பிடுவது நல்லது.
உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் சோலனைன் என்ற நச்சுப்பொருள் உள்ளது. இது, குமட்டல், வாந்தி மற்றும் நரம்பியல் பிரச்சனைகளைத் தூண்டக்கூடியது. ஆனால் உருளைக்கிழங்கு சமைக்கும்போது இந்த நச்சு முற்றிலும் அகற்றப்படும். எனவே உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது.
பீன்ஸ்: பீன்ஸில் காணப்படும் லெக்டின்கள் என்ற புரதம் குமட்டல் மற்றும் கடுமையான வயிற்று அசௌகரியத்தை ஏற்படுத்தும். பீன்ஸ் சமைக்கப்படும் போது, லெக்டின்கள் முற்றிலும் நடுநிலையாக்கப்படும்.
சுரைக்காய் : இந்த காய்கறி பெரும்பாலும் கறி மற்றும் சூப்களில் பயன்படுத்தப்படுகிறது. இதை பச்சையாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும், எனவே சமைப்பது சிறந்தது
முட்டைக்கோஸ் : சிலர் சாலட்களில் முட்டைக்கோஸை பச்சையாக வைத்து சாப்பிடுகின்றனர். ஆனால் அதனை சமைக்கும் போது, அதன் வாயு உற்பத்தி பண்புகள் குறையும். முட்டைக்கோஸில் சில நேரங்களில் பூச்சிகள் அல்லது புழுக்கள் இருக்கலாம். எனவே, அதை உப்புடன் சூடான நீரில் லேசாக வெளுக்க அறிவுறுத்தப்படுகிறது.
கத்திரிக்காய்: கத்தரிக்காயில் சோலனைன் நச்சுப்பொருள் உள்ளது.. அதிக சோலனைன் உட்கொள்வது தலைவலி, வயிற்றில் பிடிப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற நரம்பியல் மற்றும் இரைப்பை குடல் அறிகுறிகளை ஏற்படுத்தும். கத்தரிக்காயை சமைத்து சாப்பிடுவது பாதுகாப்பானது.
காலிஃபிளவர்: காலிஃபிளவரில் அதிக புழுக்கள் அல்லது பூச்சிகள் இருக்கலாம். எனவே முதலில் மஞ்சள் கலந்த வெந்நீரில் போட்டு ஊறவைத்த பின்னரே காலிஃபிளவரை சமைத்து சாப்பிட வேண்டும்.
Read More : தினமும் இந்த சிம்பிள் விஷயத்தை செய்தால் போதும்.. உங்க ஆயுளில் 11 ஆண்டுகள் சேர்க்கலாம்..!