ஒடிஷா மாநில பகுதியில் உள்ள அருகாபுருதி கிராமத்தில் கை ரிக்சா தொழிலாளியாக வேலை பார்த்து வருகிற சஞ்சய் பெஹ்ரா என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்த தம்பதிகளுக்கு பிறந்து 18 மாதங்களே ஆன வேதாந்த் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று குழந்தை வேதாந்த் சமையலுக்கு செய்துவிட்டு அலட்சியமாக வைத்திருந்த டீசலை எடுத்து தண்ணீர் என்று நினைத்து குடித்திருக்கிறான்.
இதனை பார்த்த பெற்றோர்கள் சிறுவனை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு தூக்கி சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது பற்றி தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.